சமூகத்தில் காணப்படுகின்ற அடிப்படை சமூக பிரச்சினைகளை மையமாக கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு

(அமிர்தகழி நிருபர் )

ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியுடன் யாழ் பல்கலைகழக வவுனியா வளாகமும் மட்டக்களப்பு மாவட்ட  செயலகமும் இணைந்து இலங்கைக்கான ஐரோப்பிய  ஒன்றிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின்  கீழ் இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது .


இதன்  ஊடாக சமூகத்திலும் மக்களிடமும் காணப்படுகின்ற அடிப்படை சமூக பிரச்சினைகளை மையமாக கொண்ட விழிப்புணர்வு  நிகழ்ச்சி திட்டத்தினை இன்று மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் அதிபரின் தலைமையில் கல்லூரியில் மண்டபத்தில் இடம்பெற்றது .

தற்போது கிராம மட்டத்தில் காணப்படுகின்ற  சிறுவர் துஸ்பிரயோகம் , போதைப்பொருள் பாவனை , மாணவர்கள் பாடசாலையில் இருந்து   இடை விலகல் , நவீன தொலை தொடர்பு சாதணங்கள் மூலம் சமூக சீர்கேடுகள்  போன்ற சமூக சீர்கேட்டால்  இளையோர் எதிர்நோக்குகின்ற விளைவுகளுக்கு தொடர்பாக கிராம  சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நிகழ்ச்சி திட்டத்தினை இப்பகுதியில்  முதல்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி திட்ட நிபுணர் கே .பார்த்தீபன் . திட்ட ஒருங்கிணைப்பாளர் . கே .சுபாஸ்கரன் . உதவி திட்ட உத்தியோகத்தர் வி .சுகன்யா . நிகழ்ச்சி திட்டத்தின் சமூக மட்ட செயல்பாட்டு இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .