
அத்துடன், இந்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 06 பேரைக் கொண்ட குழுவினர் புதையல் தோண்டுவதற்காக கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதிக்கு சென்றமையை அவதானித்த பொதுமக்கள்,
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்குச் சென்று மூன்று பேரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
இதேவேளை, மேலும் மூன்று பேர் தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்; கூறினர்.