149 பொலிஸ் தினத்தினை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களினால் பொலிஸ் தினத்தினை முன்னிட்டு பல்வேறு சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் தினத்தினை முன்னிட்டு இரத்தான நிகழ்வு ஒன்று இன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியும் வவுணதீவு பொலிஸ் நிலையமும் இணைந்து இந்த இரத்ததான முகாமை நடாத்தியது.
வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.ரி.நசீரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததானமுகாமில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இரத்ததானம் செய்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்ததாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி என்.ரி.நசீர் தெரிவித்தார்.