மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களினை அபிவிருத்திசெய்யும் வகையில் நடாத்தப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யும் சேவ்த சில்ரனும் இணைந்து இந்த பயிற்சி நெறியை கடந்த ஒன்பது தினங்களாக நடாத்திவந்தது.
நலிவுற்ற பெண்களைவ வலுவூட்டும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டது.
இதில் பயிற்சி நெறியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் பணிப்பாளர் கலாநிதி டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன்,செங்கலடி பிரதேச செயலாளர் யு.உதயசிறி மற்றும் சேவ்த சில்ரன் அமைப்பின் பணிப்பாளர் ஜெகிருஸ்ணானந்தன்,வை.எம்.சி.ஏ.திட்ட தலைவர் எல்.பட்றிக்,வேல்;ட்விசன் ஏறாவூர்பற்ற முகாமையாளர் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கலடி மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட 25 கிராமங்களில் இருந்து 625பேருக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்முறையாக அதிகளவு பெண்கள் கலந்துகொண்ட பயிற்சிநெறியாக இது அமைந்ததாக வை.எம்.சி.ஏ.யின் இணைப்பாளர் பயாஸ் தெரிவித்தார்.
இதன்போது பயிற்சி நெறியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.