‘தென்றல்’ சஞ்சிகையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பில் இருந்துவெளிரும் கலாண்டு சஞ்சிகையான தென்றல் சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை கிரான்குளம் சீமூன் கார்டுன் விடுதியில் நடைபெற்றது.

தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பட்டிப்பளை மற்றும் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடாத்தப்பட்ட முன்னொடிப்பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப்பெற்று 100க்கும் அதிகமான மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச ஒப்பந்தகாரர்சங்க தலைவர் வீ.ரஞ்சிதமூர்த்தி,தொழிலதிபர் க.பாக்கியராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.