பெண்னொருவரை கத்தியால் வெட்டியவர் கைது –காரைதீவில் சம்பவம்

குடும்பப் பெண்ணொருவரைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரைத் தாம் ஞாயிற்றுக் கிழமை மாலை கைது செயங்திருப்பதாக அம்பாறை – கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைப் பொலிஸ் பிரிவின் காரைதீவுப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் நேசராணி (வயது 35) என்பவரே கத்தியால் வெட்டப்பட்டுக் படுகாயமடைந்தவராகும்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனது கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தன்னைக் கத்தியால் வெட்டி தனது வலது கையைக் காயப்படுத்திய நபர் தனது கணவரின் சுகோதரன் என்றும் இந்தப் பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனின் சகோதரன் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கல்முனை கடைத்தெருவில் வைத்து காரைதீவு சாரதா வீதியைச் சேரந்த கணபதிப்பி;ள்ளை கோபிரஞ்சன் (வயது 33) என்பவர் கைது செய்யப்பட்டு;ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை;ப பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான அப்துல் கப்பாரின் வழிநடத்தலில் இந்தக் குற்றச் செயல் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.