மட்டக்களப்பு,முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகம் 44வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கல்லடி,கடல்மீன்கள் அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 30 உதைபந்தாட்ட கழகங்கள் பங்குகொண்ட மாபெரும் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.
இரண்டு தினங்கள் நடைபெற்ற போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை லைற்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் கடல்மீன்கள் அணியும் கூழாவடி டிஸ்கோ அணியினரும் மோதிக்கொண்டதுடன் மிகவும் விறுவிறுப்பாகவும் போட்டி அமைந்தது.
இறுதியில் பனால்ட்டி உதை மூலம் வெற்றிவாய்ப்பு தீர்மானிக்கப்பட்டது.இதன்படி அதிக கோல்களை இட்டு கல்லடி கடல்மீன்கள் அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இறுதிப்போட்டி நிகழ்வானது லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் க.சிவநேசராசா தலைமையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டார்.