மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஐந்தாம் நாள் உற்சவம் -பட்டாசு திருவிழா (புகைப்படம்,வீடியோ இணைப்பு)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.


உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.கிழக்கிலங்கை புகையிரத ஊழிய சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த உற்சவம் நடைபெற்றது.
இதன்போது நடனங்களுடனும் பறவைக்காவடியுடனும் பட்டெடுத்துவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்தினை வந்தடைந்ததும் பூஜைகள் ஆரம்பமானது.
இதன்போது வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி உள்வீதியுலாவும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி வெளி வீதியில் முத்துச்சப்புரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பல்வேறு வகையான பட்டாசுகள் கொழுத்தப்பட்டு திருவிழா சிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தின் ஏற்பாட்டில் வடமோடிக்கூத்து நிகழ்வும் ஆலய முன்றிலில் நடாத்தப்பட்டது.


மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஐந்தாம் நாள் பட்டாசு திருவிழா வீடியோ பார்க்க