மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 50வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரமும் மட்டக்களப்பு நகரில் வாவியில் இருந்து 50வயது மதிக்க தக்க ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்ட நிலையில் இன்று காலையும் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் அறிவுறுத்தலின் கிழ் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.