மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியத்துவமிக்க வைத்தியசாலைகளில் ஒன்றாக கருதப்படும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் 99வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்;டன.
கடந்த யுத்த காலம் தொடக்கம் இயற்கை அனர்த்தங்கள் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் அளப்பரிய சேவையினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஆற்றிவருகின்றது.
படுவான்கரை பிரதேசத்தில் ஒரு முறையான வைத்தியசாலை இல்லாத காரணத்தினால் அப்பிரதேசத்தில் வாழும் சுமார் 20ஆயிரம் குடும்பங்களின் வைத்தியசாலையாகவும் காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் தனது பணியை ஆற்றிவந்த இந்த வைத்தியசாலையினை களுவாஞ்சிகுடியை சேர்ந்த வைத்தியர் கு.சுகுணன் பொறுப்பேற்றதையடுத்து பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தனது 99வது ஆண்டை பூர்த்திசெய்யும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.வைத்தியசாலையின் அத்தியட்சர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இன்று காலை முதல் நிகழ்வாக வைத்தியசாலையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது.சிற்றுண்டிச்சாலையும் திறந்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆரோக்கிய வாழ்வு நிலையம்,தடுப்பூசி வழங்கல் பிரிவு,சத்திரசிகிச்சை கிளினிக் மற்றும் விசேடமான சத்திசிகிச்சை நிலையம் என்பன இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இதுவரை காலம் சத்திரசிகிச்சைகள்,மற்றும் சில முக்கிய சோதனைகளை மேற்கொள்ளுவதற்காக நோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுவந்தனர்.
எனினும் தற்போது அதிகமான சேவைகள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளப்படுவதனால் வெளி இடங்களுக்கு அனுப்பவேண்டிய தேவையில்லையென வைத்திய அத்தியட்சர் தெரிவித்தார்.
அதேபோன்று இதுவரை காலமும் தடுப்பூசி இடும் நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் இன்று தொடக்கம் அது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் தடுப்பூசிகளை இடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மிக முக்கியமாக மட்டக்களப்பு பீப்பிள் லீசிங்க நிறுவனதுடனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியுடனும் இணைந்து மாபெரும் இரத்ததானமுகாமும் இங்கு நடாத்தப்பட்டது.
நேற:று திங்கட்கிழமை வைத்திய பணிப்பணிப்பாளர் தனது பிறந்த நாளை கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.