மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தில் கையடக்க தொலைபேசியை திருடியவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வந்த பக்தர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் புதன்கிழமை தொடக்கம் நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில் தினமும் ஆலயத்திற்கு பெருமளவான அடியார்கள் வருகைதந்தவண்ணமுள்ளனர்.

வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற தினத்தன்று இரண்டு பெண்களின் சுமார் ஆறு பவுண் பெறுமதியான தங்க மாலைகள் பிய்த்துச்செல்லப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸார் விசேட பொலிஸ் சாவடியை ஆலய வளாகத்தில் அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பக்தர் ஒருவரின் தங்கமாலை களவாடியவரை பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.