களுவாஞ்சிகுடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றுவருகிறது

பாராளுமன்ற பொது தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்ககளப்பு மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.


தமிழரசுக்கட்சி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் விஜயரத்தினம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுவருகின்றது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,மாகாண பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.