இலங்கையில் எட்டாயிரம் இளம் தலைவர்களை உருவாக்கும் வகையிலான வேலைத்திட்டத்தினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொண்டுவருவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக அபிவிருத்திக்கான பிரதி பணிப்பாளர் சுனில் கருணாரட்ன தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவத்தினை வளர்க்கும் வகையில் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 100 இளைஞர் யுவதிகள் பங்குகொள்ளும் தலைமைத்துவ பயிற்சிமுகாம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றுவருகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.என்.எம்.நைரூஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக அபிவிருத்தி பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் சுனில் கருணாரட்ன ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இளைஞர்களை வலுப்படுத்தி சமூக நலன் சார்ந்த விடயங்களில் அவர்களின் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள் இந்த பயிற்சி நெறியின்போது வழங்கப்பட்டுவருகின்றது.