மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு நகரை அசுத்தமடையாமல் மக்களின் மகிழ்ச்சியான வருகைக்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினையாற்றிவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் சாரதிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மட்டக்களப்பு மாநகரசபையின் வரலாற்றில் வெளி அமைப்பு ஒன்று சுகாதார ஊழியர்களை கௌரவித்து பெருமைப்படுத்திய நிகழ்வாக இது அமைந்துள்ளது.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் ஓசை என்னும் தொனிப்பொருளில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் என்.சடாட்சரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட லயன்ஸ் கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது சுகாதார ஊழியர்கள் 103பேரும் சாரதிகள் 24பேருமாக 127பேர் கௌரவிக்கப்பட்டனர்.