ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்களது எதிர்காலம், தொழில்வாய்ப்பு குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்தை நடாத்தப்பட்டபோதும் தமிழ்த்தேசியம், உணர்வு, ஒற்றுமை கருதி இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.மோகன்ராஜ் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரனின் (றொபின்) வேண்டுகோளுக்கமைய இன்று(09)நடைபெற்ற கூட்டத்தின் இறுதியிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட றொபின் தெரிவிக்கையில், அம்பாரை மாவட்ட பட்டதாரிகள் நியாயமின்றி உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
கடந்த காலத்தில் ஆளுமையுள்ள நேர்மையான அரசியல் தலைமை அம்பாரை மாவட்டத்தில் இல்லாமை போனதே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அமையவுள்ள ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக, பலம்பொருந்திய அமைப்பாக மாற்றம் பெறவுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூலம் இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் அதற்காக தான் முழுமூச்சுடன் செயற்படவுள்ளதாகவும் உறுதியளித்தார்.