பழுகாமம்,கொக்கட்டிச்சோலைக்கான குடிநீர் விநியோக திட்டம் 15இல் ஆரம்பம் -பொன்.செல்வராசா

மட்டக்களப:பு மாவட்டத்தின் குடிநீர்ப்பிரச்சினையை கடுமையாக எதிர்நோக்கும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குரிய பழுகாமம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோக திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்;ட வேட்பாளருமான பொன்.செல்வராசா தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் இது தொடர்பிலான நடவடிக்கையினை மேற்கொண்டுவந்ததாகவும் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இப்பகுதியில் எதிர்நோக்கப்படும் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு என்னிடம் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் நான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரிடம் இது தொடர்பில் அறிக்கைகளையும் கடிதம்களையும் வழங்கியிருந்ததுடன் கடந்த காலத்தில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஆலோசனைக்கூட்டத்திலும் தெரிவித்திருந்தேன்.

இதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக அன்றைய அமைச்சினால் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி இப்பகுதிக்கான குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளதாகவும் பொன்.செல்வராசா தெரிவித்தார்.