சஸ்ரைன் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கோல்டன் ஈகள் விளையாட்டுக்கழகம் சம்பியன்

(திவா) 

சஸ்ரைன் விளையாட்டுக்கழகம் தனது 08வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியை வெகு விமரிசையாக பாட்டாளிபுரம்;; விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.


இப்போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன.

நேற்று இடம்பெற்ற இறுதிச்சுற்றுப்போட்டியில் சஸ்ரைன் அணியினரை எதிர்த்தாடிய து.ராஜ்குமார் தலைமையிலான கோல்டன் ஈகள் விளையாட்டுக்கழகம் 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1ம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் வெற்றிக்கிண்ணத்தையும் 1ம் இடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தையும்  ரூபா 50000 பெறுமதியான பணப்பரிசையும் அனைத்து வீரர்களுக்குமான பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
 
2ம் இடத்தை சஸ்ரைன் அணியும் பெற்றுக் கொண்டனர் அவர்களுக்கான வெற்றிக்கிண்ணமும் ரூபா 25000 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.