(அமிர்தகழி நிருபர்)
மட்டக்களப்பு விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபை ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதி தின மலர் அஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதியில் இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதி தின மலர் அஞ்சலி நிகழ்வு இன்று காலை 07.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதியில் மட்டக்களப்பு சிவானந்த தேசிய பாடசாலை அதிபர் கே .மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து அடிகளாரின் உருவ படம் தாங்கிய ஊர்வலம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமி பிரபு பிரேமானந்தா ,மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்று பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கல்வி அணி சாரா ஊழியர்கள் ,பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.