அற்பசொற்ப சலுகைக்காக கட்சிமாறாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டும் -ரொபின்

அற்பசொற்ப சலுகைகளுக்காக கட்சிமாறாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்துதமிழ்த் தேசியத்தினைப் பாதுகாப்பேன். எனது முயற்சியாலும், உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் மக்களின் மனங்களைவென்று  செயலாற்றுவதுடன் எந்தவொரு தருணத்திலும் என் மனச்சாட்சிக்கு எதிராக செயற்படேன் என அம்பாரைமாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்  அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.


தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் பற்றியும் வெளியிடப்படவுள்ள தனது கொள்கை பிரகடனம் தொடர்பிலும் அவரது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இன்று(19) இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அறப்போர் அரியநாயகத்தின் வழிவந்த அவரது பேரனாகிய நான் அவரின் தியாகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி பூண்டு செயற்படுகின்றேன். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காககடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் பல உயிர் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு அக்கட்சியினை வெல்லவைப்பதில் அளப்பெரும் சேவையாற்றிய நான் என் மக்களுக்காக இறுதி மூச்சுவரை உதவி செய்யக்காத்திருக்கின்றேன் என்றார்.

காடுவெட்டிதோட்டமாக்கி ஊரை உருவாக்கி கலைவளர்த்து வயலிலும் கடலிலும் ஆறுகளிலும் உண்டுகளித்து இன்புற்று வாழ்ந்துவந்த எம்மினம் இன்று சகோதர இனத்தவர்களின் நகரங்களில்; சாதாரண கூலிவேலை வேண்டி நிற்பதனை பார்த்து மனவேதனை அடைந்து நிற்கின்றேன். எமதுமக்களின் முயற்சிகளுக்கு தகுந்தபலாபலன்களை பெற்றுத்தரும் முதலீடுகள் மூலம் இந்த அவல நிலையைப் போக்கியே தீருவேன் என உறுதியள்pத்தார்.

மேலும் தமிழர்கள் வாழும் மரபுரீதியான தமிழ் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதுடன் பறிபோன எல்லை பகுதிகளை மீட்பதிலும் ;தொடரும் அத்துமீறல்களை தடுப்பதிலும் கூடியகவனம் எடுப்பேன் என்றார்.