வெத்திலைக்கோ யானைக்கோ வாக்களிப்பதானது தமிழன் தன்மானத்தை இழப்பதாகும்- த.தே.கூ. வேட்பாளர் சிறிநேசன் தெரிவிப்பு

மகிந்த ராஜபக்ஜ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு மேற்கொண்ட அனைத்துச் சதிகளும் தோற்கடிக்கப்படடது.த.தே.கூட்டமைப்பை சிதைப்பதற்காக திட்டமிட்டு தமிழ்த் தலைவர்கள் அழிக்கப்பட்டனர். பணத்துக்கு பேரம் பேசப்பட்டனர் எதனாலும் த.தே.கூட்டமைப்பை அழிக்கவோ சிதைக்கவோ முடியவில்லைக்கும் மத்தியில் இன்றுவரை ஒரே கொள்கையில் தமிழ் மக்களின் விடிவிற்காய் உழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது பேரினவாதக் கட்சியின் சின்னங்களான வெத்திலைக்கோ யானைக்கோ தமிழ் மக்கள் வாக்களிப்பதானது தன்மானத்தை இழப்பதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்ட்தில் போட்டியிடம் போட்டியிடம் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.


நேற்று சனிக்கிழமை மாலை கரடியனாற்றில் இடம் மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

மகிந்த ராஜபக்ஜ தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.அதே போன்றே இலட்சக்கணக்கான மக்கள் திட்டமிட்டபடி படுகொலைசெய்யப்பட்டதுடன் வடகிழக்கில் எண்பத்தொன்பதனாயிரம(89000); பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்..இவ்வாறான நிலையில் பேரினவாதக் கட்சியின் சின்னமான வெத்திலைக்கு தன்மானத் தமிழன் வாக்கழிப்பானா?

தமிழ் மக்கள் வாக்களிக்கதததினால் ஜனாதிபதியாக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஜ தமிழ் மக்கள் வாக்களித்ததினால் ஜனாதிபதி பதவியை இளக்க வேண்டி ஏற்பட்டது.ஏன் தமிழ் மக்கள் மீண்டும் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் திட்டமிட்ட இன அழிப்புக்கள் ஆகும்.

மகிந்த ராஜபக்ஜவினால் ஐக்கிய தேசியக் கட்சி முதல் முஸ்லிம் காங்ரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளையும் உடைக்க முடிந்தது சிதைக்க முடிந்தது ஆனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பை அசைக்க முடியவில்லை பியசேன என்ற பெயர் வந்த காரணத்தினால் அவரை மாத்திரம் அசைக்க முடிந்ததே தவிர வேறு எவரையும் அசைக்க முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதில் ஒரு நடவடிக்கையாக ஜோசப் பரராசசிங்கம் முதல் ரவிராஜ் வரை படுகொலை செய்யப்பட்டனர்.இன்று அவர்களை யார் படுகொரை செய்தனர் என்பதும் வெளியாகியுள்ளது.இவ்வாறான நிலையில் கூட கூட்டமைப்பபை அசைக்க முடியவிலலை என்றால் த.N.கூட்டமைப்பின் கொள்கையும் அதனை வழிநடாத்திச் செல்லும் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயாவின் அரசியல் சாணக்கியமுமே காரணமாகும்.

இந்தப் பாராளுமன்றத் தேர்தலானது கூட்மைப்பைப் பொறுத்த வரையில் முக்கியமானதாக அமையவுள்ளது.நிச்சயமாக எந்தப் பேரினவாதக் கட்சியினாலும் அறுதிப் பெரும்பாண்மை ஆசணங்களைப் பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் அப்போது த.தே.கூட்டமைப்பு அக் கட்சிகளுடன் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டுமாக இருந்தால் வடகிழக்கில் கூடுதலான ஆசணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக தமிழ் மக்களின் வாக்கழிப்பு அதிகரிக்கப்படுவதுன் மாற்றுக் கட்சிகளுக்கோ சொந்த பந்தங்களை கருத்தில் கொண்டோ சுயேட்சைக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிப்பதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பை பலவினப்படுத்துவதற்கும் வெத்திலைக் காரரும் யானைக் காரரும் அவர்களால் ஏவப்பட்ட சுயேட்கை; குழுக்கழும் பரிசுப் பொருட்களுடனும் வெகுமதிகளுடனும் வாக்குக் கேட்டு வருவார்கள் அதற்கு தமிழ் மக்கள் சோரம் போபவர்களாக இருக்கக்கூடாது.

அவர்கள் கொண்டுவரும் பரிசுப் பொருட்களோ வெகுமானங்களோ உங்கள் வரிப்பணத்தில் இருந்து அள்ளி எடுக்கப்பட்டவற்றில் இருந்து கிள்ளித்தர முற்படுவதாகும். சலுகைகளுக்கோ வெகுமதிகளுக்கோ ஏமாந்து தங்களது பெறுமதிமிக்க வாக்குகளை வழங்காது கொள்கைக்காக வாக்களிக்க வேண்டும்.அவ்வாறு வாக்களிப்பதனாலேயே மீண்டும் எமது பலத்தை உள்நாட்டிலும் சர்வதேசத்துக்கும் எமது பலத்தைக் காண்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.