இன்னாசியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகம் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

(அமிர்தகழி நிருபர் )
                                     
மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகம் ஏற்பாட்டில் “ஒரு துளி உதிரம் கொடுத்து ஒரு உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் இரண்டாவது வருடமாக நடத்தப்பட்ட  மாபெரும் இரத்ததான முகாம்  மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகம்  ஏற்பாட்டில் யேசு சபை பங்கு குரு லோரன்ஸ் லோகநாதன் தலைமையில் மாபெரும் இரத்ததானமூகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு  கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
                       
போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்தவ வாழ்வு சமூகம் இரண்டாவது வருடமாக இந்நிகழ்வு முன்னெடுத்துவருகின்றது.  இதன்கீழ் இன்று காலை முதல் மாலை வரை  இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் க.விவேக் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.