பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன் இலங்கைதமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவையில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக(நிரவாகம்) கடமையாற்றும் ஞானமுத்து சிறிநேசன் அரசியல் முதுமானிப் பட்டதாரியாகவுள்ளதுடன் கடந்த இருபது ஆண்டுகளாக வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு அரசியல் கற்பித்து வருபவராகவும் உள்ளார்.
ஞா.சிறிநேசன் போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு கட்சித் தலைமை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனை தமிழரசுக் கட்சி முக்கியஸ்த்தர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே வேளை த.தே.கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ளவர்களில் கல்குடாத் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிவுள்ள ஒருவரும் புளோட் சார்பாக போட்டியிடவள்ள ஒருவரும் இதுவரை உறுதிப்படுத்தாத நிலையில் ஏனையவர்களின் பெயர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இன்று அவர் யார் என்று தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை பட்டியலில் உறுதிப்படுதட்தப்பட்டுள்ளதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் ரெலோ சார்பாக மாகாண சபை உறப்பினர் கோ.கரணாகரம், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.