கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பயிற்சி வகுப்புகளில் பயிற்சிபெற்றுவரும் மாணவர்களின் தகைமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் சோட்டாக்கன் கராத்தே பயிற்சிகளை மேற்கொண்டுவரும் மாணவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம பயிற்சியாளரும் ஸ்தாபகருமான கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது கண்காட்சி போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் குழு நிலை போட்டிகளும் நடாத்தப்பட்டது.

குறிப்பிட்ட கால பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கும் பட்டி நிலை முன்னேற்ற மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.