மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் தனது 54வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடாத்திய “முதலூர் முழக்கம்”உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழக அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடமாக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் இந்த சுற்றுப்போட்டியை நடாத்திவருகின்றது.
இந்த சுற்றுப்போட்டியானது சனிக்கிழமை(04) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்தப்பட்டதுடன் இந்த சுற்றுப்போட்டியில் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன.
இதனடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு கொக்கட்டிச்சோலை ஈஸ்பரா விளையாட்டுக்கழகமும் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.
மிகவும் கடுமையான போட்டியின் மத்தியில் இறுதி நிமிடங்களில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் ஒரு கோலினை பெற்று போட்டியின் வெற்றியை தனதாக்கி கொண்டது.
இதனடிப்படையில் 1.0என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் தெரிவுசெய்யப்பட்டது.
இறுதி பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.
இந்த சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை கொக்கட்டிச்சோலை ஈஸ்பரா விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த கே.கோகுலனும் சிறந்த கோல் காப்பாளராக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த எஸ்.ரூபேஸ் மற்றும் சிறந்த முன்னணி வீரராக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழக என்.ரதனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மூன்றாவது வெற்றி அணியாக அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது.