மட்டக்களப்பு பாடுமீன் ரொட்டறிக்கழகத்தின் 56வது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

மட்டக்களப்பு பாடுமீன் ரொட்டறிக்கழகத்தின் 56வது தலைவர் தனது கடமையினை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி,ஓசியானிக் விடுதியில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகளை கடந்த 50வருடத்துக்கு மேல் ஆற்றிவரும் பாடுமீன் ரொட்டறிக்கழகத்தின் 55வது தலைவர் ரொட்டறியன் டோமிங்கோ ஜோர்ஜ் ஓய்வுபெற்றதை தொடர்ந்து 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான 56வது தலைவராக எஸ்.சிவரூபன் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு முன்னாள் தலைவர் ரொட்டறியேன் டோமிங்கோ ஜோர்ஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் ரொட்டறிக்கழகத்தின ஆளுனர் ரொட்டறியேன் சேனக அமரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் புதிய தலைவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் பழைய தலைவர் ரொட்டறியன் டோமிங்கோ ஜோர்ஜ் தனது கடமைகளை புதிய தலைவரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வின்போது ரொட்டறிக்கழகத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதிப்பங்களிப்பினை வழங்கிய சட்டத்தரணி ரொட்டறியன் வினோபா இந்திரன் வருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் சிறந்த பொருளாளராக கடமையாற்றிய ரொட்டறியன் பி.முத்துலிங்கம் கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த சேவையாற்றிய கபினட் சபை உறுப்பினர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் உதவி ஆளுனர் மற்றும் லயன்ஸ் கழக தலைவர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.