மதுபோதையில் நான்கு விபத்தினை ஏற்படுத்தி ஐந்து பேரை காயப்படுத்திய பஸ் நடத்துனர் பொதுமக்களால் நையம்புடைப்பு

மது போதையில் பஸ் செலுத்தி தொடர்ச்சியாக 4 விபத்துக்களை ஏற்படுத்தி 5பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கிய பஸ் நடத்துனரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இன்று நண்பகல(ஞாயிறறுக் கிழமை); மட்டக்களப்பில் இடம்பெற்றது.


தனியாருக்குச் சொந்தமான கொக்கட்டிச்சோலை கொழும்பு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் ரோஜல் பஸ் நடத்துனர் மது போதையில் திருத்த வேலைக்காக கராச்சிக்கு கொண்டு சென்ற போது மட்டக்களப்பு லேக் மீதியில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒரவரை அடித்துவிட்டு தப்பிச் சென்ற போது மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதியில் மேலும் நான்கு வீதி விபத்துக்களை ஏற்படுத்தி 5 பேரை படுகாயங்களுக்கு உட்படுத்திய சம்பவம் இடம்பெற்றதுடன் காயங்களுக்கு உள்ளானவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுக்கப்பட்டுள்ளனர்.

பஸ்சுடன் தப்பிச் சென்ற பஸ் நடாத்துனர் ஜெயந்திபுரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற போது துரத்திச் சென்ற பொது மக்கள் பஸ் நடாத்துனரை சரமாரியாக தாக்கியதுடன் மட்டக்களப்பு வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர் மது போதையில் பஸ்சை செலுத்தியுள்ளதாகவும் வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற போதே ஏனைய வீதி விபத்துக்கள் ஏற்பட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது இரண்டு துவிச்சக்கரவண்டிகளையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும்; இதன் போது பஸ் நடாத்துனர் அடித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த 5 பேரில் ஒருவருக்கு பால் முறிந்துள்ளதாகவும் ஏனையவர்களுக்கு சாதாரண காயம் எனவும் வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கின்றது.இவர்கள் 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் நான்குபேர் விபத்துப் பிரிவிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.