- வேல்மகன்.-
கிழக்கு மாகாணத்திலே பல வைத்தியசாலைகள் அரசினால் பல்வேறு வசதிகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது.
பிரதேச வைத்தியசாலை,மாவட்ட வைத்தியசாலை,தள வைத்தியசாலை,போதனா வைத்தியசாலை என பல்வேறு வகையான நாமங்களுடன் பெயருக்கேற்ற வசதிகளை அவை கொண்டுள்ளன.
இவற்றை விட அவசர நிலைகளில் உதவுவதற்காக பல நோயாளர் காவுவண்டிகளையும் அவை கொண்டுள்ளன.நோயாளர் சேவைக்காக போதுமான ஆளணியினையும் இவ் வைத்தியசாலைகள் கொண்டுள்ளன.
இருப்பினும் மனச்சாட்சிகளுடன் மக்களுக்கு சேவையை செய்வதற்கான மனிதர்களை இவ் வைத்தியசாலைகள் கொண்டிருக்கவில்லை.உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சேவை நிலை மறந்து வியாபாரிகளாக செயற்படும் நிலையே இங்கு மேலோங்கி நிற்கின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையில் இந்த அசாதாரண நிலை மிக அதிகமாக காணப்படுகிறது.துன்பப்படும் நோயாளர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் உயிர்ப் பாதுகாப்புக்கான போராட்டத்தை பணம் சம்பாதிக்கும் மூலதனமாக பயன்படுத்தி மருத்துவ வியாபாரம் நடைபெறுகின்றது.
தனியார் வைத்தியசாலைகளின் அதிகரிப்பு, காப்புறுதி பெற்றுக்கொண்டவர்களின் தனியார் வைத்தியசாலைகளுடனான தொடர்பு பணம் படைத்தவர்களின் கவலையற்ற மருத்துவ செலவுகள் போன்ற சுய நலமான செயற்பாடுகள் மருத்துவதுறை ஊழியர்களை விலைக்கு வாங்கிக் கொண்டது.
இதன் காரணமாக சுகாதார துறை அதிகாரிகள் சிலர் பணம் பிடுங்கும் செயல்திறனை கற்றுக்கொண்டனர்.ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளை அறியாதவர்களாக சுகாதார நிபுணர்கள் சிலர் நடந்து கொள்கின்றனர்.
அரச வைத்தியசாலையான போதனாவைத்தியசாலை இன்று தனியார் வைத்தியசாலைகளின் முகவர் நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது.
சிறிய நோயாயினும் பெரிய நோயாயினும் அதற்கான ஆரம்ப சிகிச்சையை பெற நாடவேண்டிய இடமாக தனியார் வைத்தியசாலைகள் உருவாகியுள்ளன.
சுகாதார அதிகாரிகள் தனியார் வைத்தியசாலைகள் மீது கொணடுள்ள காதலை அங்கு செலவிடும் நேரத்தை அரச வைத்தியசாலையில் காண்பிப்பதில்லை.
சில சுகாதார அதிகாரிகளிடையே நடைபெறுகின்ற தொழிற்போட்டி நோயாளிகளை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு சேர்க்கின்றது.சில மரணங்கள் சம்பவித்து இன்று வரை அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சில சிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளில் செய்வதற்கு எமக்கு நேரமில்லை தனியார் வைத்தியசாலைக்கு வந்தால் உடனே செய்யமுடியும் என அரச வைத்தியசாலை சாய்சாலையிலே கூறி அங்கேயே சிகிச்சைக்கான பணத்தொகையும் தெரிவிக்கப்பட்டு அன்றைய நாளிலே தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையும் நடாத்தி முடிக்கப்படுகிறது.
அரச வைத்தியசாலையை நாடுகின்ற ஏழைமக்களும் இவர்களது மாயவலைக்குள் விழுந்து தங்களிடம் இருக்கும் சொத்துக்களை விற்று அல்லது வட்டிக்கு கடன் வாங்கி அல்லது தமது அயராத உழைப்பினால் தமது பிள்ளைகளுக்கென சேர்த்த தங்க நகைகளை விற்று உயிர்ப் பாதுகாப்பை ஒரே இலக்காக கொண்டு தனியார் வைத்தியசாலைகளிலே சிகிச்சை பெற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
சில அதிகாரிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்களுக்கு பணம் வழங்குகின்ற மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மருந்துகளே நல்லவை என நோயாளிகளுக்கு கூறி அவற்றையே நோயாளிகளை வாங்குவதற்கு பணிக்கின்றனர்.
சில சிகிச்சைகள் போதனா வைத்தியசாலையில் இரண்டாம் நிலை உத்தியோகத்தர்களினாலேயே மிக அதிகளவில் செய்யப்படுகின்றன.ஏனெனில் மேலதிகாரிகள் தனியார் வைத்தியசாலைகளிலே பண மயக்கத்தில் கிடக்கின்றனர்.
இவற்றையெல்லாம் இனிமேலும் அனுமதிக்க முடியாது.மட்டக்களப்பின் புத்திஜீவிகள் இந்த மண் மீது பற்றுக்கொணடவர்கள் சமயத்தலைவர்கள்,சட்டவல்லுனர்கள் போன்றோர் இதில் அக்கறை செலுத்தவேண்டும்.
கிழக்கு மாகாணத்துக்கே உரியதான இப் போதனா வைத்தியசாலை தரம் குறையாமல் மக்களுக்கான தனது சேவையை செய்ய இடம் ஏற்படுத்தப்படவேண்டும்.நோயினால் துன்புறும் மக்களின் பணத்தை கறந்து கண்ட இடமெல்லாம் காணிகள் வாங்கி மாளிகை அமைக்கும் வீணர்கள் முன் வீழ்ந்த மாந்தரை காக்க மக்களும் துடிப்புடன் விழித்தெழ வேண்டும்.
கேள்விகள் கேட்டு தங்களுக்கான இலவச சுகாதார சேவையை உரிமையோடு பெற்றுக்கொள்ள இலவச சுகாதார சேவையை பாதுகாக்க மக்களும் தயாராகவேண்டும்.
சுகாதாரதுறை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் மூலம் போதுமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்கள் தங்களுக்கான கடமை நேரத்தில் தவறாமல் உள்ளார்களா? என்பதையும் மேலதிகாரிகள் கண்டுகொள்ளவேண்டும்.
கைகூப்பி வணங்கக் கூடிய சுகாதார துறைக்கே உரித்தான பண்புகளை கொண்ட பல கௌரவமான சுகாதார ஊழியர்களை கொண்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ள போதிலும் ஒரு சிலர் இன்றைய வைத்தியசாலை செயற்பாடுகளையே அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளனர் எனவே மக்களுக்கான சேவையை பெற்றுத்தர அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.