மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி சந்தியில் தனியார் பஸ் வண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.00மணியளவில் கதுறுவெலவில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ்சே இவ்வாறு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.