தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் இன ஒற்றுமையினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்வு நடாத்தப்பட்டது.

தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விரிவுரையாளர்கள்,மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

உயர் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்கள் மத்தியில் சமூக ஒற்றுமையினை கொண்டுவருவதன் மூலம் எதிர்காலத்தில் சமூகங்கள் மத்தியில் இதனை ஏற்படுத்துவம் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டதாக கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் அனைத்து இன மாணவர்களும் இணைந்தே மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.