மட்டக்களப்பில் இரு ஆலயங்களின் தீர்த்த உற்சவம்

மட்டக்களப்பில் உள்ள இரு நாகதம்பிரான் ஆலயங்களின் தீர்த்த உற்சவம் மாமாங்கம் அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் நடைபெற்றது.

கள்ளியங்காடு புத்துநாகம்மா ஆலயம் மற்றும் இருதயபுரம் நாகலிங்கேஸ்வரர் ஆலயங்களின் தீர்த்த உற்சவமே இன்று காலை நடைபெற்றது.

கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் அலங்காரத்திருவிழாவில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.

கண்கண்ட தெய்வமாக இந்து மக்களால் போற்றப்படும் நாகதம்பிரான் ஆலயங்களின் உற்சவத்தின் தீர்த்த உற்சவத்தினை முன்னிட்டு மாமாங்க பிரதேசம் பக்தி மனம் கவிழ்வதாக இருந்தது.

தீர்த்த உற்சவம் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் நடைபெற்றதை தொடர்ந்து ஊர்வலமாக ஆலயத்தினை நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.