பெரியகல்லாறை சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் பரிதாப மரணம்

அவுஸ்திரேலியா  சிட்னியில் உள்ள பெண்டிஹில் என்னும்  இடத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் நேற்று இரவு பரிதாபமாக மரணமாகியுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தினை சேர்ந்த பெரியகால்லாறு மூன்றாம் குறிச்சியை சேர்ந்த நவரட்ணம் அஜந்தன்  என்னும் புகலிடக் கோரிக்கையாளரே மரணமடைந்துள்ளார்.

மின்சார சூடாக்கியின் அருகாமையில் இறைச்சி வெட்டும் இயந்திரத்துக்கு பாவிக்கும் கரியை வைத்து  உறங்கியுள்ளார்.

இதன் காரணமாக காபன் மொனொரோரைட் என்ற நச்சு வாயுவினால் இச் சம்பவம் நடந்திருக்கலாம் என  நம்பப்படுகின்றது.

இந்த புகலிடக் கோரிக்கையாளர் கடந்த 3 வருடங்களுக்கு  முன் அவுஸ்திரேலியா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.