கிழக்கில் த.தே.கூட்டமைப்புக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்!(கட்டுரை)

(மகா)

இந்த புனித நோன்பு பெருநாள் நிறைவை கொண்டாடும் இஸ்லாமிய மக்களே! கடந்த 30 நாட்களாக நீங்கள் உங்களை வருத்திக் கொண்டு சகோதரதுவத்தையும் பண்பையும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்தும், சிந்தனையுடன் இருந்து இன்று அந்த மகிழ்ச்சியின் வெளியிடும் போது நாமும் உங்களுடன் இணைந்து கொளகின்றோம்.


அந்த வகையில் சில கடந்த காலத்தில் எமது மக்களும் அரசியல் தலைமைகளும் நல்லெண்ணங்களை உங்களுடன் பகிர்ந்ததை நினைவுபடுத்துகின்றோம்.

முஸ்லிம் மக்களே, அரசியல் தலைவர்களே தமிழ் மக்கள் உள்ளங்களுடன் நல்லுறவுடன் இருந்து வந்துள்ளமை அரசியல் ரீதியாகவும் ஒற்றுமைக்காகவும் நாங்கள் உங்களுக்கு செய்த நன்றிகளைத்தான் கூறுகின்றோம்.

01. நமக்குள் பல முரண்பட்ட கருத்துக்கள் இருந்து உண்மையே, எனினும் நாம் அன்றும் இன்றும் எமது சகோதரர்களாகவே நினைத்து செயல்படுகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02. வடக்கு- கிழக்கு, மேற்கு, மத்திய மாகாணங்களில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழும் நமது இரு சமூகமும் பல கசப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களே.

03. இருப்பினும், பல முஸ்லிம் தலைவர்ளை தமிழ் சமூகம் அரசியல் ரீதியாக முதன்மை பெற பாரிய பங்களிப்பை செய்துள்ளது.

04. வட கிழக்கிற்கு வெளி மாகாணங்களில் குறிப்பாக தலைநகர் கொழும்பில், மற்றும் கண்டியில் முஸ்லிம் தலைமைகள் அரசியலில் வெற்றி பெற தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பும் உதவியதை மறுக்க முடியாது.

05. முன்னைய அரசு காலத்தில் அமைச்சராகவும், தற்பொழுது ஜனாதிபதியின் ஆலோசகராகவும் கடமையாற்றும் திரு.பைசர் முஸ்தபா அவர்களை அரசியலுக்கு அழைத்து வந்தது இதே தமிழ் மக்கள்தான் (இ.தொ.கா)

06.கொழும்பில் இன்றைய நகர முதல்வர் திரு முசாம்பில் அவர்களுக்கு அதிகப்படியான விருப்பு வாக்குகளை அள்ளி கொடுத்ததும் இந்த தமிழ் மக்களே

07.மத்திய மாகாணத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை அதிகப்படியான விருப்பு வாக்குகளினால் வெற்றிபெறச் செய்ய போவதும் இதே தமிழ் மக்களேதான் (எமக்கு கிடைத்த தகவலின்படி தமிழ் மக்கள் அவருக்கும் ஓர் விருப்புவாக்கை தரவிருப்பதாகவும் அறிகின்றோம்)

08.கிழக்கு மாகாணத்தில் மாகாணசபையில் அதிக ஆசனங்களுடன் த.தே.கூ இருந்தும் அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசை முன்னைய அரசு ஆசைகாட்டி மோசம் செய்து பிளவுபடும் நிலையில் தத்தளித்த போது அந்த சமூக அமைப்பு சிக்கலில் இருந்து காப்பாற்றி சகோதர பாசத்துடன் ஆதரவு வழங்கி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பான முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது.

09.இதன் மூலம் இலங்கையில் மட்டுமல்ல முழு உலகத்திற்கும் வடக்கு முதலமைச்சர் தமிழ் இனத்தையும், கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் இனத்தை உறுதிப்படுத்தியது த.தே.கூ.

10.இந்த நிலையில் நாம் உங்களிடம் அன்பு காட்டியுள்ளோம், நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

11.அதற்கு கைமாறாக தமிழ் இன அங்கத்துவத்தை அதிகரிப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும், அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூ சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்து நீங்களும் தமிழ் மக்கள் செய்த நன்றிக்கடனை தீர்க்க இந்த புனித நாளில் சபதம் எடுக்க முன் வர வேண்டும்.