நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழர் தரப்பு முதன்மைவேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசதுரைசந்திரகாந்தன் 16.07.2015ம் திகதி வாகரைம துரங்கேணிக்குள கிராமமக்களுடன் கலந்துரையாடும் போதுமேற்கண்டவாறுதெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சந்திரகாந்தன்,
நடைபெற உள்ளபாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி(வுஆஏP) ஜனாதிபத pமைத்திரிபாலசிறசேன தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உட்பட மட்டக்களப்பு மாநகரமுன்னாள் பிரதிமேயர் ஆபிரகாம் ஜோர்ஜ் பிள்ளை,போரதீவைச் சேர்ந்த வர்த்தகரும் சமாதான நீதிவானுமான கிருஸ்ணபிள்ளை சிவனேசன் (வெள்ளையன்),மட்டக்களப்பு தாழங்குடாவைச் சேர்ந்த சமூகசேவையாளர் செல்லத்துரை அரசரெட்ணம் (அரஸ்) ஆகியோர் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம் பெற்றகலந்துரையடலுக்கு அமைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது, ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் நடைபெற உள்ளநாடாளுமன்ற தேர்தலில் இணைந்துபோட்டியிட தீர்மானித்துள்ளது.
நிச்சயிக்கப்பட்டபாராளுமன்ற பிரதிநிதித்துவம், மாவட்டஅபிவிருத்தி குழு தலைமைபதவி, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு முன்னுரிமை, அமைச்சரவையில் தகுதியான இடம் அத்துடன் பாராளுமன்றதேர்தலினால் கிழக்குமாகாணசபையில் ஏற்படும் வெற்றிடங்களுக்குதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு முன்னுரிமை போன்ற உறுதியான விடயங்கள் அடங்கிய ஒப்பந்தத்தின் பிரகாரம் இக் கூட்டிணைப்பில் எமது கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளார்கள்;.நிரந்தரமான அரசியல்
தீர்வு, மாகாணங்களுக்கான அதிகாரபகிர்வு, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் எமது கண்முன்னே இருக்கின்ற உடனடி தேவைகளாகும்.
இதனை சீர் செய்ய கிடைத்திருக்கின்ற நல்லதோர் தருணம் இதுவாகும்.
தமிழ் மக்களின் தூரநோக்கற்ற பலவீனமான அரசியல் தலைமைகளினால் தமிழர்களுக்கான கிழக்குமாகாண ஆட்சி முஸ்லீம் காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே 07 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசின் கீழ் கூத்தாடிகளாக இருக்க, வேலைவாய்ப்பிலும், நிதிஒதுக்கீடுகளிலும் தமிழர் பகுதி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளுக்கான நிதிகளும், தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களும் முஸ்லீம் பிரதேசங்களுக்கும் முஸ்லீம ;இளைஞர் யுவதிகளுக்கும் திருப்பி விடப்படுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் அமையப்பெற்ற ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் அதன் 100 நாள் வேலைத்திட்டத்திலும் தமிழ் மக்கள் எவ்வித பலனையும் அடையவில்லை. மாகாண சபை அதிகாரம் உட்பட முழுப்பலனையும் அனுபவித்தது முஸ்லீம்களே! தமிழ் மக்களின் அரசியல் தீர்வுதொடர்பிலோ, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலோ, மாகாண அதிகாரம் தொடர்பிலோ, மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலோ எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கூட்டமைப்பின் சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தனிப்பட நலன்களுக்காக பறிபோனதாக கூட்டமைப்பின் மீதுகுற்றம் சாட்டப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் மத்திய அரசாங்கத்தில் எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி ஜனாதிபதியின் அனுசரனையுடன ;மாகாண, மாவட்ட அதிகாரங்களை கைப்பற்றி எமது நிலங்களை பாதுகாத்து எமக்கான அரசியல் அதிகாரங்களையும் பெறகிடைத்திருக்கின்ற அரியசந்தர்ப்பத்தினை எமது உறவுகளான நீங்கள் சிந்தித்துசெயற்படுவீர்களாயின் எமக்கான விடிவுதொலைவில் இல்லை என்றார்