மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு வாபஸ்

2015ஆம் ஆண்டுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்பட்ட பொலிஸார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலின் கீழ் பொலிஸ் மா அதிபரினால் நேற்று இரவு முதல் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக வழங்கப்பட்ட பாதுகாப்புகள் வாபஸ்பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.