வாகனத்துக்கும் இணைப்பாளர் பதவிகளுக்கும் சொந்தங்களைக் காட்டிக்கொடுக்கும் பச்சோந்திகளுக்கும் இனி தலை நிமிர முடியாத அளவு பலமான அடியை தமிழ் மக்கள் இந்த தேர்தலில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு,முறக்கொட்டாஞ்சேனையில் இன்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தெரிவிக்கும் அரசியல் கருத்துக்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேல், சந்தானம் ஆகிய நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவையை விஞ்சிய நகைச்சுவையாகவே எம்மக்கள் நோக்குகின்றனர்.
தெரிந்தே தோல்வியை தழுவிக்கொண்டு எம் மக்களை குழப்புவது மூலம் இவர்கள் பெற முயல்வது வெறும் இணைப்பாளர் பதவி, இணைப்புச் செயலாளர் பதவி மிஞ்சிப்போனால் நிறுவன, கூட்டுத்தாபன தலைவர் பதவியேயாகும் இவர்களுக்கு தேவை, சாரதியற்ற ஒரு வாகனமும், கொடுப்பனவாக கிடைக்கும் சிறு சில்லறைகள் மட்டுமேயாகும்.
இந்த சுயநலத்துக்காகத்தான் வெற்றிபெறும் வீராப்புபேசி தமிழர் வாக்குகளைப் பிரித்து தமிழர் பிரதிநித்துவத்தை சிதைக்க முயல்கின்றார்கள். கடந்தகாலத்திலும் இவர்கள் இதையேதான் செய்தார்கள். இன்று இவர்களில் சிலர் ரிட்டன் டிக்கட்டிலே வந்துள்ளார்கள்.
இவர்கள் ஒன்றை மட்டும் இலகுவாக மறந்து விடுகின்றார்கள். இத்தகைய அரசியல் பச்சோந்திகளை விடவும் எம்மக்கள் தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்கள் விகிதாசாரப் பிரதித்துவத்தின் சூத்திரம் புரிந்தவர்கள். ஏல்லாவற்றுக்கும் மேலாக கடந்த காலப் பட்டறிவு மூலம் பாடம் பெற்றவர்கள் எனவே எம்மக்கள் இத்தேர்தல் மூலம் புகட்டுவார்கள் இவர்களுக்கு தக்க பாடம்.
இப்பாடம் கடலைக் கலக்கி பருந்துக்கு கொடுக்கும் பச்சோந்திகளுக்கும் ரிட்டன் டிக்கட்டுகளும் வாகனத்துக்கும் இணைப்பாளர் பதவிகளுக்கும் சொந்தங்களைக் காட்டிக்கொடுக்கும் இவர்களுக்கும் இனி தலை நிமிர முடியாத அளவு பலமான அடியாக இருக்கும்.