எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
வடகிழக்கு உட்பட பல பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கீழ் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில அதன் தலைமை அலுவலகம் மட்டக்களப்பு நகரின் கோவிந்தன் வீதியில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சுரேஸ் தலைமையில் இந்த அலுலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த அலுவலக திறப்பு விழாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.கநே;திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.