யானை தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட உன்னிச்சை பிரதேச மக்கள்அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடாத்தினர்.
உன்னிச்சை பிரதேசத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் யானைத்தாக்குதல்கள் காரணமாக அச்ச நிலையிலேயே உள்ளதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
குறிப்பாக உன்னிச்சைப்பிரதேசத்தின் பத்தரைக்கட்டை கிராமத்தில் இரவு வேளையில் மக்கள் உறங்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் இங்கு மக்கள் தெரிவித்தனர்.
உன்னிச்சை பிரதேச விவசாய அமைப்புகளின் தலைவர் கே.யோகவேள் தலைமையில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
எதிர்வரும் 3ஆம் திகதி யானை தாக்குதல் உள்ள பிரதேசத்தினை பார்வையிட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக தமக்கு உறுதியளித்ததாக உன்னிச்சை பிரதேச விவசாய அமைப்புகளின் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகம் மட்டக்களப்பில் உள்ளதனால் அதன் சேவையினை உடனடியாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலைமை தங்களுக்கு உள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.