மக்களின் தேவையினை பூர்த்திசெய்யும் வல்லமையுள்ளவர்களை தெரிவுசெய்யுங்கள் -பொன்.செல்வராசா எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களிள் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வல்லமைபொருந்தியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான பொன்.செல்வராசா தெரிவித்தார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டமானது நேற்று திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் நடைபெற்றது.

தாழங்குடா பொது அமைப்புகள் மற்றும் தமிpழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஒழுங்குசெய்த இந்த கூட்டம் தாழங்குடா பல்தேவைக்கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்;டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது அதற்காக குரல் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே.இந்த நாட்டில் தமிழர்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி,வல்லமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலமே தமிழர்களின் உரிமைகளைபெற்றுக்கொள்ளமுடியும்.நாங்கள் இந்த தேர்தல் மூலமாக ஓரு பேரம்பேசும் சக்தியாக மாற்றம்பெறவேண்டும்.

நாங்கள் யானைக்கோ வெற்றிலைக்கோ வாக்களிப்பதானது எமது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையினையும் தரப்போவதில்லை.மாறாக அது சமூகத்துக்கு பாரிய தீங்கினையே விளைவிக்ககூடியதாகவிருக்கும். இதன்மூலம் எமது மற்றைய சமூகமே பலனடையும் நிலையும் ஏற்படும்.

நாங்கள் சிந்திக்கவேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.எமது போராட்டங்கள் அடக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியான போராட்டங்களில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம்.என்றார்.