வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதருமாறு மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு சங்கம் கடிதம் ஒன்றிணையும் அனுப்பியுள்ளது. சங்கத்தின் செயலாளர் வி.பத்மஸ்ரீயின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமையில் பங்குபற்றுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகின்றது.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசியல் கட்சிகளுடன் சார்ந்து செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு மறுக்கப்படுகின்றது.
ஒரு சில ஊழியர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த ஊழியர்களுக்குமான சலுகைகள் மறுப்படுவது நியாயமற்றதாகும்.
தேர்தல் விதிகளை மீறுவோருக்கான சட்ட நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.குற்றம் செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.
அவ்வாறில்லாமல் சந்தேகத்தின் பேரில் அனைத்து ஊழியர்களின் சலுகைகளை மறுப்பதானது நியாயமான செயலாகாது.எமது தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்கான சலுகைகளை வழங்குதல் தொடர்பான சாதகமான பதிலை விரைவில் பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.