மாமாங்கம் பிரதான வீதி புனரமைப்பு

(அமிர்தகழி நிருபர் ) 

புதிய அரசின் 1௦௦ நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக மண்முனை பிரதேச செயலக பிரிவுகளில்  பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் மேற்பார்வையின் கீழ் மாமாங்கம் பிரதான வீதி செப்பனிட்டு புனரமைப்பு செய்யப்பட்டுவருகின்றன.

நீண்டகாலமாக இந்த வீதி புனரமைக்கப்படாத நிலையில் பல்வேறு தடவைகள் இந்த வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையில் வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த வீதியின் குறுகிய பகுதியே புனரமைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதியையும் புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.