மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் போலியோ நோய் உள்ளதாக சிறுவன் ஒருவன் அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று விசேட போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் முற்றாக போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் முதன்முறையாக மட்டக்களப்பில் இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இந்த சிறுவன் போலியோ நோய் தாக்கத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சிறுவன் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திய சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இருதயபுரம் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜேசுராஜா தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து குறித்த சிறுவன் அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு விசேட திட்டத்தின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கை இன்று காலை முதல் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது இருதயபுரம் கிழக்கு,இருதயபுரம் மேற்கு,ஜெயந்திபுரம்,பெரிய ஊறணி,ஞானசூரியம் சதுக்கம்,இருதயபுரம் மத்தி ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருதயபுரம் கிழக்கு ஈஸ்டன் சுப்பர் கிங்ஸ் இளைஞர் கழகத்தின் அனுசரணையுடன் பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் இந்த பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன்போது சுமார் 1200 சிறுவர்களுக்கு இதுவரையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக இருதயபுரம் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜேசுராஜா தெரிவித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இந்த விசேட போலியோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.