மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய யு.என்.வாஹிஸ்ட தனது 35வருடகால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச்சென்றார்.
அவரின் சேவையினை கௌரவிக்கும் வகையில் மட்டக்களப்பில் அணிவகுப்பு மரியாதை மற்றும் கௌரவிப்பு பிரியாவிடை நிகழ்வு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் உபுல் ஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சர்கள்,மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் தலைமையக பொலிஸார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய யு.என்.வாஹிஸ்டவுக்கு அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பினையும் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.
இறுதியாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் கைலாகு கொடுத்து பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு பிரியாவிடையளித்தனர்.