மாணவி வித்தியா படுகொலையை கண்டித்து களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள் போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதனைக்கண்டித்து மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய மாணவர்களும் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.