ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உயிரிழப்பு –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் காங்கேயனோடை பிரதேசத்தினை சேர்ந்த செய்யுதுன் பேபி மொஹம்மட் லெப்பை என்ற 58வயதுடைய பெண்னே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது மோதி இந்த விபத்தினை ஏற்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.மணியளவில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளை செலுத்தி வந்தவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.