மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகப்பணி மூலம் எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்வதில் முன்னணி ஊடகவியலாளராக திகழ்ந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்கள் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றுடன் 11வருடங்களாகின்றது.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஐயாத்துரை நடேசன் அவர்கள் வட பகுதியை சேர்ந்தவராக இருந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீதும் கிழக்கின் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவராக இருந்துவந்தார்.
ஊடகப்பணியை எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது மிகவும் தைரியத்துடனும்நேர்மையுடனும் மேற்கொண்டுவந்த ஒரு ஊடகப்போராளியை மட்டக்களப்பு மாவட்டம் இழந்து 11வருடங்களை கடந்து நிற்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு மிகவும் காத்திரமான பங்களிப்பினை வழங்கிய வழங்கியதில் சிவராம் மற்றும் நடேசனின் பங்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இறுதி மூச்சுவரை ஊடகத்துறைக்கும் சமூகத்துக்கும் ஆற்றிய நடேசனின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டமும் அவர் இறுதிவரை கடமையாற்றிய ஊடகங்களும் மறந்தது கவலைக்குரியது.
அண்மைக்காலமாக நடேசனின் கொலை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பித்து கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.