கல்லடியில் இடம்பெற்ற விபத்தில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் காயம் -உதவ முன்வராத வர்த்தகர்கள்

மட்டக்களப்பு ,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி,உப்போடையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் காயமடைந்துள்ளார்.


கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மட்டக்களப்புக்கு சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில்சென்றுகொண்டிருந்தபோது வான் ஒன்றை முந்திசெல்ல முயன்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இநேரம் குறித்த விபத்து இடம்பெற்றபோது குறித்த பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்களில் உள்ளோர் உதவமறுத்தமை கவலைக்குரிய விடயமாகும்.

விபத்தில் கல்விப்பணிப்பாளர் காயமடைந்தபோது அவரை அருகில அமர்த்துவதற்கு கதிரை ஒன்று தருமாறு கேட்டபோது அதனை தருவற்கு யாரும் முன்வராதமை கவலைக்குரியதாகும்.

அத்துடன் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்பதற்கு பல முச்சக்கர வண்டிக்காரர்களிடம் கேட்டபோதும் யாரும் முன்வரவில்லை.

மட்டக்களப்பில் மனிதர்களில் மனிதாபிமானம் இல்லாத செயற்பாடுகளை இன்று காணமுடிந்தது.