மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரினை பாதுகாக்கும் வகையில் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிறுவை அளவீடு கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
வர்த்தக நிலையங்களில் முத்திரையிடப்படாத தராசுகள் பாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் வருடாந்தம் இந்த முத்திரையிடும் பணிகளை திணைக்களம் மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
வருடாந்த் பணிகள் மேற்கொண்டுவருகின்றபோதிலும் சில பகுதிகளில் சில வர்த்தக நிலையங்கள் இவற்றினை கருத்தில்கொள்ளாமல் நுகர்வோரை சுரண்டும் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.இவ்வாறான வர்த்தக நிலையங்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைகளையும் மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 423 அளவை கருவிகளுக்கு முத்திரை பதிக்கப்பட்டதாகவும் இந்த தற்போது இன்றுவரையில் சுமார் 150 நிறுளை அளவீட்டு கருவிகளுக்கு முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடக்கம் இன்று வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 324 பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவற்றின்போது 39பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றம் ஊடாக 43000ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.