இறைவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் வரியிறுப்பாளர் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட இறைவரித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறந்த வரியிறுப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இறைவரித்திணைக்கள அத்தியட்சர் எம்.கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இறைவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி கல்யாணி தகநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள்,வரியிறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் 07பேருக்கு தங்க அட்டை விருதுகளும் 12பேருக்கு வெள்ளி அட்டை விருதுகளும் இதன்போது அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
உரிய முறையில் தமது வரிகளை செலுத்திவந்தவர்கள் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டு இந்த விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.