மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களுல் ஒன்றாக மட்டக்களப்பு கோட்டைமுனை அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று சிறப்பாக நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் பிள்ளையார், மாரியம்மன், வள்ளி தெய்வானை சமேதர சுப்பிரமணியர், சிவன் பார்வதி மற்றும் சண்டேஸ்வரி ஆகிய சுவாமிகளுக்கு அலங்கார பூஜை இடம்பெற்று, பின்பு சுவாமிகள் உள்வீதி வலம் வந்து பஞ்ச ரதங்களில் ஆரோகணித்தும் வீதி உலா ஆரம்பமானது.
ஆலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பாடும் மீன் வீதி, பயணியர் வீதி, பெயிலி வீதி, சென் செபஸ்தியார் வீதி, பொற்தொழிலாளர் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தன.
வருடாந்த மஹோற்சவத்தின் கிரியைகள் மஹோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ வரதகோபால சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பத்து தினங்களாக நடைபெற்றுவரும் இந்த உற்சவத்தில் ஓன்பதாம் நாளான இன்று பஞ்ச இரதோற்சவமும் பத்தாம் நாளான நாளை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.