இதயத்தின் இரு அறைகளாக தமிழ் முஸ்லிம் மக்கள் இருக்கவேண்டும் -கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

காலம் எம்மை பிரித்து துக்கிவீசி அங்கும் இங்குமாக இருந்தோம். அந்நிலைமாறும் காலம் தற்போது மிளிர்ந்துள்ளது. இதயத்தின் இரு அறைகளாக தமிழ் முஸ்லீம் மக்கள் இருக்கவேண்டும் என கிழக:கு மாகாண விவசாய கால்நடை,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.


கல்முனைஉவெஸ்லிஉயர்தரபாடசாலையின் பழையமாணவரும் கிழக்குமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்குமாகாணப் பணிப்பாளராகவும் பதவிஉயர்வு பெற்றுள்ள கல்முனை உவெஸ்லியன் வைத்தியகலாநிதி எம்.ஏ.எம். பாஸி அவர்களை கல்முனை உவெஸ்லியன் 78ஃ82 பழையமாணவர்கள் அமைப்பினர் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் அமைப்பின் தலைவரும் சர்வோதயத்தின் மாகாணங்களுக்கான இணைப்பாளருமாகிய ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 78ஃ82 பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமதுபாடசாலைகள் என்பதுஎமதுதாய்மடிக்குஒப்பானவை. அந்தநினவுகள் நாம் கல்லறையில் சங்கமிக்கும் வரை எம் நினைவில் வந்துகொண்டே இருக்கும். அவற்றைநினைவூட்டும் நிகழ்வுகளும் மிகவும் அருமையானவை. நட்புஎன்பதுவெறுமனேபழகுவதால் மட்டும் வருவதல்ல. அதுஉணர்வுகளின் ஒன்றிப்பால் வருவது. நண்பர்கள் என்றாலேஒருஉரிமைபிறக்கும். தாய் தந்தைக்குப் பிறகுநட்புஎன்றஉரிமையே இருக்கின்றது.

அந்தவகையில் நாம் கிழக்குமாகாணத்தில் இன மதபேதமின்றிநட்புடன் தமிழ் பேசும் மக்களாகவாழ்ந்தவர்கள் இந்தநாட்டிற்குசுதந்திரம் கிடைக்கப்பெற்றநாள் தொடக்கம் எமதுசிறுபாண்மை இனங்களின் சுதந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருந்தபோதுசிறுபாண்மை இனங்கள் ஒன்றுசேர்ந்தாலே இந்தநாட்டில் ஒருமாற்றத்தைக் கொண்டுவரமுடியும்என்றுசிறுபாண்மை இனங்களின் ஒன்றுமையைஎண்ணியவர் தந்தைசெல்வா.

பட்டிப்பளைஎனும் எமதுதமிழ் பிரதேசத்தினை கல்லோயாத் திட்டத்தின் கீழ் பெரும்பாண்மை இன மக்கள் குடியேற்றப்பட்டபோதுஅங்கு தூங்கிக் கொண்டிருந்தஎம்மவர்களைதட்டியெழுப்பியவர் வடக்கில் இருந்துவந்ததந்தை. அன்றுஅவர் பிரதேசவாதம் பார்க்கவில்லை. அவர் தமிழ் பேசும் மக்கள் என்றரீதியில் ஒற்றுமையுடன் எழுங்கள் என்று கூறினார்.

அதுபோல் நாம் ஒன்றித்து பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒருமித்துச் சென்றோம். பலபோராட்டங்களில் நாம் ஒருமித்து அடம்பன் கொடிபோல் திறண்டுநின்றோம். இதனால் அஞ்சியது சிங்கள அரசு. அதன் பின்பே தமிழ் மொழிக்கு சிறப்பு கிடைத்தது. இதுபோன்று பல விடயங்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையினால் கிடைத்தது. ஆனால் காலம் எம்மை பிரித்து துக்கிவீசிஅ ங்கும் இங்குமாக இருந்தோம்.

அந்நிலைமாறும் காலம் தற்போது மிளிர்ந்துள்ளது. இதயத்தின் இரு அறைகளாக தமிழ் முஸ்லீம் மக்கள் இருக்கவேண்டும் என்றசெய்திஎமதுசமுக்களுக்குச் செல்லவேண்டும். தமிழ் முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் பேதங்களைமறந்துகைகோர்த்துசெல்கின்றகனவைநாம் அனைவரும் காணவேண்டும் அதற்காகமுயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் ஒவ்வொருவகையில் தாய் தந்தையரின் க~;டங்களாலேயேவளர்க்கப்பட்டோம். எவ்வாறு இருப்பினும் கல்விஎம்மைஉயரத்தில் தூக்கிவைத்தது. அந்தஉயர்வினைப் பயன்படுத்திநாம் எமதுசமுகத்திற்குசேவைபுரியவேண்டும்.

சேவைஎன்றஒன்றுதான் மனிதருக்குத் தேவை. நாம் மற்றவர்களுக்குகொடுக்கக் கூடியதும் அதுதான். தன்னுடையமனதால் எவன் பெரியவனாக இருக்கின்றானோஅவன்தான் உண்மையானபணக்காரன் ஆகின்றான்.

நாம் பெற்றிருக்கின்றபடிப்பும் பதவியும் எமதுமக்களுக்குசெய்கின்றசேவையாகத்தான் இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குதற்போதுகிடைத்திருக்கின்றஅமைச்சுகள் தலையில் சூடிக்கொள்ளும் மகுடங்கள் அல்ல அவை எமது மக்களுக்கு சேவைசெய்வதற்கானகருவிகளே.

 இந்தநாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் சுமைகளில் இருந்துமீண்டுவரக்கூடியசெயற்பாடுகளையேதமிழ் தேசியக் கூட்டமைப்புஎப்போதும் மேற்கொள்ளும். இந்தநிலையில் இருந்துஎப்போதும் பின்வாங்காதுஎன்றுதெரிவித்தார்.